இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எட்டயபுரம் ரோடு மங்கள விநாயகர் கோவிலில் இருந்து மந்தித் தோப்பு செல்லும் ரோட்டை விரிவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர துணை செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரோஜா, துணைச் செயலாளர் அலாவுதீன், தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், செல்லையா, ஜோசப், வக்கீல் கண்ணம்மாள், நகர குழு உறுப்பினர்கள் குருசாமி, சண்முகவேல், ராஜூ, முருகேசன், விஜயலட்சுமி, வஜ்ரேஸ்வரி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story