இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

போலியாக பத்திரவு பதிவு செய்துள்ள சார்-பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கழுகுமலையில் சார்- பதிவாளரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்குள்ள காந்தி மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். உதவி செயலாளர்கள் கருப்பசாமி, எட்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், சேதுராமலிங்கம், லெனின்குமார், மாவட்ட துணை செயலாளர் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

போலி பத்திரப்பதிவு

ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியபுரம், வேலாயுதபுரம், நாலாந்துலா, சரவணபுரம், காலாங்கரைபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களை போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதை கண்டித்தும், முறைகேடாக பத்திரம் பதிவு செய்துள்ள சார்- பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், முறைகேடாக பத்திர பதிவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கயத்தாறு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்மகேந்திரசிங், கிளை செயலாளர்கள் இராமலிங்கம், சங்கரலிங்கம், மாதர் சங்கம் அந்தோணியம்மாள், விவசாய சங்கம் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கு கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story