பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பபட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 'ஹைடெக் பெஸ்ட்' என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடந்தது. கல்லூரி தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்றார். நிகழ்ச்சியில், அறிவியல் படைப்பு, காய்கறிகளில் இருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஊமை நாடகம், கோலப்போட்டி, கவிதை போட்டி மற்றும் ஆடை அலங்கார போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து 804 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியனாக விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பெரியதாழை லிட்டில் பிளவர்ஸ் உயர்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், பூச்சிக்காடு இந்து உயர்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றனர். சீனியர் பிரிவில் நவ்வலடி டி.எம்.என்.எஸ். மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், தெற்கு கள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றனர். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட கல்வி அலுவலர் பாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். மேலும் டி.டி.என். கல்வி குழுமத்தின் சார்பாக களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஆனைக்குளம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளிக்கும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக கணினி மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஆயர் இல்ல செயலர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கல்லூரி துணை முதல்வர் விமலா நன்றி கூறினார்.


Next Story