மத்திய அரசை கண்டித்து3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம்சத்தியமங்கலத்தில் முத்தரசன் பேட்டி


மத்திய அரசை கண்டித்து3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம்சத்தியமங்கலத்தில் முத்தரசன் பேட்டி
x

மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று சத்தியமங்கலத்தில் முத்தரசன் கூறினார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று சத்தியமங்கலத்தில் முத்தரசன் கூறினார்.

எந்த நன்மையும் செய்யவில்லை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். ஆனால் நிறைவேற்றவில்லை. பல லட்சம் இளைஞர்கள் வேலை இழந்ததுதான் மிச்சம். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றனர். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் கலவரம் தேசத்தையே உலுக்கிவிட்டது. கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும், நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது.

பிரதமர் மோடி எங்கு பேசினாலும் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை பற்றி பேசாமல், குடும்ப அரசியல், லஞ்சம், ஊழல் குறித்து மட்டுமே பேசுகிறார். அதற்கு அவருக்கு தார்மீக தகுதி கிடையாது. நமக்கு கிடைத்த முதல்-அமைச்சர் மிகவும் பக்குவப்பட்டவர்.

தொடர் மறியல்

மத்திய அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, எனவே மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12, 13, 14-ந் தேதி என 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்,எல்.ஏ. பி.எல்.சுந்தரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்குமார், தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுடர் நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story