குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்


குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  30 வாகனங்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்
x

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது

தேனி

தேனி மற்றும் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தேனி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டன. 34 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 2 கார்கள், ஒரு ஜீப் என மொத்தம் 39 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முன்னிலையில் ஏலம் நடந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். சில வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த மதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி அவற்றை யாரும் ஏலம் எடுக்கவில்லை. முடிவில் 30 வாகனங்கள் மொத்தம் சுமார் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் போயின. வாகனங்களை ஏலம் எடுத்தவர்களுக்கு வாகனங்களுக்குரிய ஆவணங்கள், அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான ஆவணங்களை போலீசார் ஒப்படைத்தனர். இதில் கலால் உதவி ஆணையர் விஜயா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாபு, முருகேஸ்வரி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story