பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதி கராத்தே மாஸ்டர் ராம்குமார் பயிற்சி அளித்த கராத்தே போட்டியில், பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, சென்னை எம்.ஜி.ஆர்.ஜானகி அம்மாள் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூத்தாநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்சி அளித்த மாஸ்டர் ராம்குமாரையும், கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பாராட்டி வாழ்த்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story