காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ராகுல் காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து அரக்கோணம், ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் நகர தலைவர் பார்த்தசாரதி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஒரு பிரிவாகவும், காங்கிரஸ் மாநில ஜவகர்பால் மஞ்ச் தலைவர் நரேஷ் தலைமையிலான கட்சியினர் ஒரு பிரிவாக ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பும் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது திடீர் மறியலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 25 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆற்காடு

இதேபோன்று ஆற்காடு பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். வாலாஜா வட்டாரத் தலைவர் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், ஆற்காடு நகரத் தலைவர் எஸ்.பியாரேஜான், ஆற்காடு வட்டாரத் தலைவர் வீரப்பா, ஆற்காடு சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சையத்முஜீப் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story