குலசேகரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


குலசேகரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

குலசேகரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் எபனேசர் தலைமை தாங்கினார். இதில் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜரெத்தினம், பொதுச் செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்கள் பினிஷ், ஜெயசிங், ஓபிசி பிரிவு செயலாளர் ஜாண் வெர்ஜின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும், அரிசி மற்றும் உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், ரப்பர் மரங்களை தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், உரங்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.


Next Story