சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க காங்கிரஸ் ஆதரவு


சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க காங்கிரஸ் ஆதரவு
x

சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது என கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை,

பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது வரியை உயர்த்தி விட்டு ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

அண்ணாமலையைபோன்று நான் 20 ஆயிரம் புத்தகங்களை படிக்கவும் இல்லை. அரசியல் சாசன புத்தகத்தையும் முழுமையாக படிக்கவில்லை. தேவைப்பட்டால் அதனை (அரசியல் சாசன புத்தகம்) புரட்டி விளக்கம் தெரிந்து கொள்வேன். அதற்காக, அரசியல் சாசன புத்தகத்தை அவர் எனக்கு வழங்க வேண்டாம். அந்த புத்தகத்தை அவரே (அண்ணாமலை) நன்கு படித்து, கவர்னருக்கு கையெழுத்து போட அதிகாரம் இல்லாத நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் உள்ளதா? என்று தெரிந்து கொள்ளவும்.

'ரெய்டு' வருமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை 'ரெய்டு' வரும் என்கிறார் அண்ணாமலை. இவர் என்ன உள்துறை மந்திரியா? இது ஒன்றும் மராட்டியமோ, மேற்கு வங்காளமோ அல்ல. தமிழகத்தில், தி.மு.க.வுடன் நாங்கள் (காங்கிரஸ்) கம்யூனிஸ்டு இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் என அவர்களைவிட (பா.ஜ.க.) ஆயிரம் மடங்கு பலம் பொருந்தியவர்கள் உள்ளோம்.

சிவசேனாவை மிரட்டுவது போல், தி.மு.க.வை மிரட்ட நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் தி.மு.க. பயப்படப் போவதில்லை.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர், திருவள்ளுவர் சிலைகள், மராட்டியத்தில் உள்ள வீர சிவாஜி சிலைகளையெல்லாம் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் வைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய வேண்டும். நீண்ட காலம் தமிழ் சமூகத்திற்காக, தமிழர்களுக்காக உழைத்த ஒரு மனிதருக்கு, அவரது நினைவாக, அவர் அதிகம் எழுதிய பேனாவை நினைவுச் சின்னமாக வைப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story