பள்ளிபாளையம் பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பள்ளிபாளையம் பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் போயர் தெருவில் உள்ள பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையில் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, பிரகார தெய்வங்களுக்குரிய பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் பச்சியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story