அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள்


அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள்
x

அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.40 கோடி மதிப்பில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிக்கு தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். மேலும் கான்கீரிட் கம்பிகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். கட்டிடப்பணியை துரிதப்படுத்த வேண்டும். இன்னும் 6 மாதத்தில் கட்டிடப்பணி முடிவடையும். அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டம், ரெயில்வே மேம்பாலத்திட்டம் ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என கூறினார். அதேபோல ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தலைமை மருத்துவர் மாரியப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியன், சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன், நிர்வாகிகள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story