கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை


கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை
x

கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் கரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் பெறுவது சம்பந்தமாகவும், விவசாயிகள் கொப்பரை தேங்காயை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கான குடோன் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் வட்டார வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் அபிராமி தலைமை வைத்து விவசாயிகளிடம் பேசும் போது :-விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களிடம் உள்ள கொப்பரை தேங்காய்களை விற்பனை மையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். கூட்டத்தில் கரூர் வட்டார தொடக்கக் கூட்டுறவு வங்கிகளின் கள அலுவலர் சந்திரன், துறை சார்ந்த அதிகாரிகள், வேட்டமங்கலம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை ஆகிய ஊராட்சி பகுதிகள், புகழூர் நகராட்சி பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.


Next Story