கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா: வாபஸ் பெற தமிழக அரசு முடிவு
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறி தமிழக கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
சென்னை,
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருப்பதை 3 ஆண்டுகளாக குறைக்கும் விதிகள் இருந்தன. இந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
எனினும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டு இருந்தார். இந்த நிலையில், கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக கவர்னருக்கு சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவை திருமப் பெறுவதன் மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவே நீடிக்க உள்ளது.
Related Tags :
Next Story