கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார்பாச்சி, சுகாதார அலுவலர்கள் லூர்துசாமி, சிவக்குமார், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் கொண்ட துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து கை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கை கழுவுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.