கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், குறிப்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் கள நிலவரம். எனவே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மக்களிடையே எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story