தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், நேற்று சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story