பாபநாசத்தில், பருத்தி ஏலம்
பாபநாசத்தில், பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து59-க்கு விலை போனது.
தஞ்சாவூர்
பாபநாசம்;
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.தாட்சாயினி தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து சராசரியாக 1329.4 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 59-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5 ஆயிரத்து409-க்கும் விலை போனது.
Related Tags :
Next Story