அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் முதல் கட்டமாக பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம் வணிகவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 610 மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி மூலம் அழைப்பு விடப்பட்டது. கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் மேற்பார்வையில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில் துணை முதல்வர் சங்கர், துறைத்தலைவர்கள் மோட்ச ஆனந்தம், சங்கீதா, வீரலட்சுமி மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story