சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு


சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு
x

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டினார்.

மதுரை


சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகள் ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் நடந்தது.

இப்போட்டிகளில் 180 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் என 26 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 3 பயிற்சியாளர்களுடன் 16 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் மதுரையில் இருந்து சென்றவர்களில் 5 பேர், மதுரை, சிக்கந்தர்சாவடியில் உள்ள பெத்சான் சிறப்பு பள்ளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பங்கேற்ற விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பெத்சான் சிறப்பு பள்ளி முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

விழாவில், ஐகோர்ட்டு வக்கீல் கு.சாமிதுரை, சிறப்பு கல்வி ஆசிரியர் சைக், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கல்யாணி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் முரளி கிருஷ்ணன், ஜவஹர் அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ், கரூர் ஜாய் கோச் உரிமையாளர் சாமுவேல், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இணைச் செயலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைவர் ஜெயசீலன் நன்றி கூறினார்.


Next Story