விஷம் கலந்த தண்ணீரை குடித்த 3 பசுமாடுகள் சாவு
விஷம் கலந்த தண்ணீரை குடித்த 3 பசுமாடுகள் இறந்தன.
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடி ஒன்றியம் ஒருவானேந்தல் ஊராட்சி தேவர் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவர் பசு மாடுகளை வைத்து வளர்த்து வந்தார். மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் கடலாடியில் இருந்து பொதிகுளம் செல்லும் சாலையில் வயலில் 3 பசு மாடுகள் இறந்து கிடந்தன. இது குறித்து இளஞ்செம்பூர் போலீசில் அழகர்சாமி புகார் செய்தார். கடலாடி கால்நடை மருத்துவ அதிகாரிகள் இறந்த மாடுகளை பரிசோதனை செய்ததில் விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் மாடுகள் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story