தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழா


தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழா
x

தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தனர். இரண்டாம் நாள் காலை திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். இதில் ஒரு சில பக்தர்கள் 6 அடி, 8 அடி, 12 அடி அலகு குத்தி பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். சுந்தரராஜ பெருமாளுக்கு மாவிளக்கு எடுத்து பூஜை செய்தனர். 3-ம் நாள் இன்று காலை அன்னதானம் நடைபெற்று மாலை காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 4-ம் நாள் காலை வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Related Tags :
Next Story