மழையால் பருத்தி செடிகள் பாதிப்பு
சீர்காழி பகுதியில் மழையால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டன.
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி வடபாதி, காரைமேடு, புதுத்துறை, ஆதமங்கலம், பெருமங்கலம், தொழுதூர், அகணி, நிம்மேலி, வள்ளுவகுடி, கொண்டல், திருமுல்லைவாசல், கடவாசல், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் கோடைபயிரான பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. இந்த நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி செடிகள் முறிந்தும், வெடித்த பஞ்சுகள் நனைந்தும் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளன. மேலும் தினமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் தொடர்ந்து பஞ்சுகளை பறிக்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story