தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பூப்பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பூப்பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

பெரிய கந்தூரி விழா

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் பெரிய கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

பூப்பல்லக்கு ஊர்வலம்

இதை முன்னிட்டு மாலையில் பூபல்லக்கு ஊர்வலம் நடந்தது.பூக்களாலான புனித கொடி சுமந்த பல்லாக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், யானை, குதிரை ஒட்டகங்களுடன் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் தர்காவில் இருந்து புறப்பட்டு ஆசாத்நகர், கோரையாறு பாலம் சென்று திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று மீண்டும் தர்காவை அடைந்தது.

முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகநாதன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story