கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்


கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
x

காரைக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

சோமநாதபுரம் போலீஸ் சரகம் அமராவதிபுதூர் அண்ணா நகரில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கோவில் கட்ட முயன்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்முரளி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கிராம நிர்வாக அலுவலரை அவதூறாக பேசி, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்து, உருட்டுக்கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (வயது 49), சிவமணி (42,) செல்வம் (43) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.வெள்ளைச்சாமி என்பவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story