பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஜவுளிக்கடைக்காரர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஜவுளிக்கடைக்காரர் கைது
x

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, ஜவுளிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள வடக்கு இலங்குளத்தைச் சேர்ந்தவர் சந்தன சிலுவை மகன் அந்தோணி அருள்ராஜ் (வயது 38). காரியாண்டியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மலர்விழி (வயது 45). இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் இடத்தில் தனக்கு சொந்தமான இடம் உள்ளது எனவும், அதில் கட்டக்கூடாது எனவும் அந்தோணி அருள்ராஜ் கூறியுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி அருள்ராஜ், மலர்விழி கட்டிவரும் வீட்டை சேதப்படுத்தியும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மலர்விழி, வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து அந்தோணி அருள்ராஜை கைது செய்தார்.


Related Tags :
Next Story