தேன்கனிக்கோட்டையில்இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தேன்கனிக்கோட்டையில்இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேன்கனிக்கோட்டையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் தேன்குஅன்வர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட துணை தலைவர் சபியுல்லா, மாவட்ட செயலாளர் சண்முகம், தளி தொகுதி பொறுப்பாளர் சுஹேலுதீன், நகர துணைத்தலைவர் ஜெயக்குமார், வெங்கடேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மஞ்சுநாத், அசேன்ராஜா, மாவட்ட செயலாளர் அக்மல், நகர தலைவர் ஷேக் ஆதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story