ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் ஆதித்தமிழர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திண்டிவனம் வி.கலையரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரசு முன்னிலை வகித்தார். மகளிரணி தலைவர் சாவித்திரி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும், கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் மோடியின் உருவ படத்தை தீ வைத்து எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதை தடுத்தனர். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முடிவில் மாவட்ட பொறுப்பாளர் அதியவளவன் நன்றி கூறினார்.



Next Story