காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கடையநல்லூர் நகர காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து அமலாக்கதுறை விசாரணை நடத்துவதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். செங்கோட்டை முன்னாள் சேர்மன் சட்டநாதன், கிருஷ்ணாபுரம் பால் கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் ரமேஷ், சர்புதீன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் சமுத்திரம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நகர துணை தலைவர் சுந்தரபாண்டி, நகர பொருளாளர் மஸ்தான், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணை தலைவர் முகம்மது ரபி, ஐ.என்.டி.யூ.சி. நகர தலைவர் மாடசாமி, மாவட்ட ஓபிசி துணை தலைவர் ரவி, மாவட்ட பிரதிநிதி குருநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.