நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைப்பதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைப்பதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைப்பதை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நெடுஞ்சாலை செல்கிறது. இதில் வாகனங்கள் அதி வேகமாக இயக்குவதை தடுக்க பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகத்தடைகளால் வாகன விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேவாலா பஜாரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் சுதர்சனன் தலைமையில் மலர் வளையத்துடன் சென்று வேகத்தடைகளுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக போலீசார் விரைந்து வந்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தடுக்க முயன்றனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story