கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாட்டறம்பள்ளி, திருப்பத்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தீர்த்தகிரி, பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திரியாலம் கிராம நிர்வாக அலுவலர் அருணா நன்றி கூறினார்.

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.மகேஷ் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் டி.ஆர்.இளையராஜா வரவேற்றார். கோட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. சுந்தரேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயசூர்யா, வட்ட பொருளாளர் ஹரிதாஸ், ரமேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story