மணிப்பூர் முதல் மந்திரியை பதவிநீக்கம் செய்யக்கோரி மதுரையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் முதல் மந்திரியை பதவிநீக்கம் செய்யக்கோரி மதுரையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர்.

முன்னதாக சென்னையில் இந்த சம்பவத்தை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக அம்மாநில முதல் மந்திரியை பதவிநீக்கம் செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில், மாநில பாஜக அரசின் ஆதரவோடு பழங்குடி மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறி - மதவெறி வன்முறையைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story