டிரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி


டிரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
x

திண்டிவனம் அருகே டிரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயங்கி வரும் நீர்வள நில வள திட்டத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம் இருவேல்பட்டு கிராமத்தில் டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கான செயல்விளக்க பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். உழவியல் பேராசிரியர் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் முனைவர் வனிதா, இளநிலை உதவியாளர்கள் சுவேதா, இரங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவை வேளாண்மை பல்கலைக்கழக மண்ணியல் துறை இணை பேராசிரியர் குமரபெருமாள் கலந்து கொண்டு டிரோன் தெளிப்பான் பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தார். இதில் விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story