டெங்கு கொசு புழு ஒழிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டெங்கு கொசு புழு ஒழிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி டெங்கு கொசு புழு ஒழிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு.வின் டெங்கு கொசு புழு ஒழிப்பு தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவா் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும். சுழற்சி முறையில் நிறுத்துவதை கைவிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை ஒழிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை அதிகப்படுத்த வேண்டும். இந்த பணி திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களிடம் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் கடைபிடிக்கும் விரோத போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story