1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு


1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 22 Sep 2022 7:01 PM GMT)

தர்மபுரி பகுதியில் தடையை மீறி 10 பண்ணை குட்டைகளில் வளர்க்கப்பட்ட 1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

தர்மபுரி

தர்மபுரி பகுதியில் தடையை மீறி 10 பண்ணை குட்டைகளில் வளர்க்கப்பட்ட 1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

திடீர் ஆய்வு

பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி இந்த ரக மீன்களை வளர்க்கிறார்களா? என்பதை கண்டறிய அதிகாரிகள் குழுவினர் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா, தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மதி கோன்பாளையம், காமாட்சி அம்மன் தெரு, பழைய தர்மபுரி ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

1 டன் மீன் அழிப்பு

அப்போது 10 மீன் குட்டைகளில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்ப்பது தெரிய வந்தது. அவற்றில் இருந்த ஒரு டன் மீன்களை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

இது தொடர்பாக இந்த மீன்களை வளர்த்த குட்டைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். அரசின் எச்சரிக்கையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை பண்ணை குட்டைகளில் வளர்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அதிகாரிகள் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story