அர்ச்சகர் நியமனத்தை கண்டித்து பக்தர்கள் போராட்டம்
திற்பரப்பு மகாதேவர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்தை கண்டித்து பக்தர்கள் போராட்டம்
குலசேகரம்,
திற்பரப்பு மகாதேவர் கோவிலில் அர்ச்சகராக ஒருவர் பணியில் இருந்தார். அவர் அங்கு பணி செய்ய பிடிக்காமல் கடந்த நவம்பர் மாதம் வேறு கோவிலுக்கு மாறுதலாகி சென்றார். இந்தநிலையில் அவரை மீண்டும் திற்பரப்பு கோவிலுக்கு அர்ச்சகராக தேவசம் போர்டு நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த நபரை இந்த கோவிலில் அர்ச்சகராக மீண்டும் நியமித்துள்ளதை ரத்து செய்ய வேண்டுமென்று நேற்று காலையில் பக்தர்கள் கோவில் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து ெகாண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் ஸ்ரீகாரியம் புருசோத்தமன் சம்பவ இடத்துக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 'இதுதொடர்பாக தேவசம் போர்டு இணை ஆணையரிடம் பேசி இறுதி முடிவு எடுக்கலாம்' என்று கூறினார். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.