புத்தாண்டையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
புத்தாண்டையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு வருகிறது. புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் காலை முதலே தஞ்சை பெரிய கோவிலில் குவிந்து வருகின்றனர்.
தொடர் விடுமுறை என்பதாலும் புத்தாண்டு என்பதாலும் குடும்பம் குடும்பமாக வந்து பலர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடும் பனியைக்கூட பொருட்படுத்தாமல் காலை நடை திறக்கப்படுவதற்கு முன்பிருந்தே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story