பழுதடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்


பழுதடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
x

பழுதடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என திருவண்ணாமலை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் ரமணன், ஆணையாளர் பரமேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் (நிர்வாகம்) கோபி வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும் சமமாக வேலைகள் வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒன்றிய பொது நிதியில் இருந்து மேற்கொள்வது.

மாணவர்களின் சத்துகுறைபாட்டை போக்கவும் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழகத்தில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story