ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா


ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில்  தீமிதி விழா
x

ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே ஆடுதுறை அம்மன் கோவில் தெருவில் மாமரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தீமிதி விழா கடந்த 5-ந்தேதி காப்பு கட்டுதல் பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. விழாவில் நேற்றுமுன்தினம் அம்பாள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு வீதி உலாவாக வந்தது. தொடர்ந்து பால்குடம் சுமந்தும், அழகு காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் நோக்கி வந்தனர். பின்னர் தீமிதி விழா நடைபெற்றது. விழாைவயொட்டி மாமரத்து மாரியம்மன் கோவிலில் திரளான பெண்கள் குவிந்தனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் உள்பட அழகு காவடி சுமந்து வந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆடுதுறை எம். பி. ஆர். இளங்கோவன் உள்ளிட்ட நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story