திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:45 PM GMT)

அரகண்டநல்லூர் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

விழுப்புரம்

திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அப்பனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினசரி சாமி வீதிஉலா நிகழ்ச்சியும், இரவு மேடை நாடகமும் நடைபெற்று வந்தது. மேலும் அர்ஜுனன் தபசு ஏறுதல், மாரியம்மன் தேர் ஊர்வலம், கூழ் வார்த்தல் மற்றும் மாடுபிடி சண்டை போன்றவை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடந்தது. அப்போது விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். விழாவில் பில்ராம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா, தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் கிராம மக்களும் முன்னின்று செய்திருந்தனர். அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story