தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சாலையின் நடுவே பள்ளம்

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காட்டில் இருந்து திருமாந்துறை செல்லும் சாலையில் உள்ள வளை சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீராம், லெப்பைக்குடிக்காடு.

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் வகையில் களரம்பட்டியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்வதினால் முதியோர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பஸ் நிறுத்தத்தின் அருகே போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், களரம்பட்டி.

மின்சாதன பொருட்கள் பழுது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த குறைபாட்டினால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெரணி.


Next Story