தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், உஞ்சினி அம்பேத்கர் நகரில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த ஓராண்டாக ஆமை வேகத்தில் நடைபெறுவதினால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது அரச நிலையிட்டபுரம் கிராமம். இங்கு 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விக்கிரமங்கலத்தில் இருந்து அரச நிலையிட்டபுரம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரசநிலையிட்டபுரம்.

நோய் தொற்று அபாயம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்காலில் துப்புரவு பணியாளர்கள் கையுறை, காலுறை, முக கவசம் அணியாமல் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களின் கால்களில் கண்ணாடி ஓடுகள், முட்கள் குத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.


Next Story