தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வேகத்தடைகள் ஆய்வு செய்யப்படுமா?

அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலை வழியாக தினமும் வி.கைகாட்டியிலிருந்து காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், வாலாஜாநகரம் ஆகிய கிராமங்களின் வழியே எண்ணற்ற டிப்பர் லாரிகள் 24 மணி நேரமும் அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு மின்னல் வேகத்தில் சுண்ணாம்புக்கற்களை ஏற்றி செல்கிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து பலர் உயிரிழந்த உள்ளனர். இதை தடுக்க வி.கைகாட்டி முதல் அரியலூர் கலெக்டர் ஆபீஸ் வரை 10 வேக தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகள் மீது எந்த லாரிகளும் நின்று செல்வதில்லை. அனைத்து வேகதடைகளும் வேகத்தடைகளாக இல்லை. தினமும் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வி.கைகாட்டி முதல் அரியலூர் வரை உள்ள அனைத்து வேகத்தடைகளையும் உரிய ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீழப்பழுவூர்.

சாலை அமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் ஊராட்சி கிராமத்தில் உள்ள பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை வலுவிழந்து மழைபெய்யும்போது ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதுடன், சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், விரகாலூர்.


Next Story