வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை நகர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

கடலூர்

அண்ணாமலை நகர்

தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குர்ராலா சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார். அதன்படிஅவர் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.70 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தில்லோடை சீரமைப்பு பணி, அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கே.ஆர்.எம். நகர் பூங்கா புனரமைப்பு பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை நல்ல தரத்துடன் முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு இயக்குனர் கிரண்குர்ராலா உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி, செயல் அலுவலர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி, இயக்குனர் கிரண்குர்ராலாவிடம், பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story