விக்கிரவாண்டியில் பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி


விக்கிரவாண்டியில்    பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:47 PM GMT)

விக்கிரவாண்டியில் பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி நடைபெற்றது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தாலுகா பகுதியில் பருவமழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பாதிப்பின் போது, மக்களுக்கு மீட்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் முதல்நிலை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் கால சிறப்பு பயிற்சி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் இளவரசன் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ஜோதிவேல், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார்.விக்கிரவாண்டி தீயணைப்புநிலைய அலுவலர் (பொறுப்பு) முகுந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், மாவட்ட பயிற்றுனர்கள் செந்தில்குமார், தஸ்தாகீர் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு தாலுகாவில் உள்ள முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு மீட்பு பணி குறித்து பயிற்சி அளித்தனர். இதில், விக்கிரவாண்டி தாலுகாவிலுள்ள நான்கு குறுவட்டங்களில் முதல்நிலை பொறுப்பாளர்கள் 600 பேர் உள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 50 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.


Next Story