மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய மற்றொரு டாக்டர் பணியிடை நீக்கம் - சுகாதாரத்துறை இயக்குனர் நடவடிக்கை


மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய மற்றொரு டாக்டர் பணியிடை நீக்கம் - சுகாதாரத்துறை இயக்குனர் நடவடிக்கை
x

மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய மற்றொரு டாக்டரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை இயக்குனர் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவள்ளூர்

மீஞ்சூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 9 ஆரம்ப சுகாதர நிலையங்களுக்கு தலைமையிடமாக உள்ளது. இங்கு மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் நிஜந்தன் (வயது 32). இவர் அங்கு பணியாற்றும் பயிற்சி டாக்டரை மாற்று பணிக்கு செல்லும்படி கூறியுள்ளார்.

அப்போது அங்கு இருந்த மற்றொரு மருத்துவ அலுவலரான டாக்டர் டேவிஸ் செந்தில் குமார் அவரை மாற்று பணிக்கு அனுப்ப மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நிஜந்தனை, டேவிட் செந்தில் குமார் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

டாக்டர் டேவிஸ்செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்கள், நர்சுகள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அனைவரிடமும் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மாவட்ட துணை இயக்குனர் ஜவஹர்லால் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணை செய்து இயக்குனருக்கு அறிக்கை அளித்தனர்.

அதன் பேரில் டேவிஸ் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை இயக்குனர் நடவடிக்கை மேற்கொண்டார்.


Next Story