பெண்ணிடம் தகராறு; தொழிலாளி கைது
பெண்ணிடம் தகராறு செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மஞ்சூர்
மஞ்சூர் குந்தா மின்வாரிய அலுவலகத்தில் 35 வயது பெண் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கும், குந்தா பாலம் பகுதியை சேர்ந்த தொழிலாளியான ஜாபர் (வயது 45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண்ணுக்கு ஜாபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் ஜாபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணிடம் ஜாபர் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரிடம் தகாத வார்த்தையால் பேசி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜாபர் தகாத வார்த்தையில் பேசியது உறுதியானது. தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜாபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜாபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.