பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story