டி.எல்.ஆர். கல்வி குழுமத்தின் பட்டமளிப்பு விழா


டி.எல்.ஆர். கல்வி குழுமத்தின் பட்டமளிப்பு விழா
x

டி.எல்.ஆர். கல்வி குழுமத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு- ஆரணி மெயின் ரோட்டில் விளாப்பாக்கத்தில் உள்ள டி.எல்.ஆர். கல்வி குழுமத்தின் 18-ம் ஆண்டு விழா மற்றும் 18-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் டி.எல்.ரவி தலைமை தாங்கினார். கல்லூரி அறங்காவலர் டி.லோகநாதன், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சண்முகம் ராமசாமி, தாளாளர் பி.கோமதி ரவி, அறங்காவலர் மைசூரி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர்கள் நிர்மலா, திலகவதி, கவுதமன் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. நிறுவன தலைவர் கலைமாமணி வி.ஜி.சந்தோசம்‌ கலந்து கொண்டு, பி.எட்., எம்.எட். மாணவ- மாணவிகள் 530 பேருக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் 170 பேருக்கும் பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக நடந்த 18-ம் ஆண்டு விழாவில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சென்னை மெட்ரோ ரெயில் போலீஸ் சூப்பிரண்டு கே.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஸ்ரீ கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் இயக்குனர் ஆர்.சுகுமார், பைனான்சியர் ஜெ. அஜித்ராஜ், சென்னை ஆசிரியர் பயிற்சி நிறுவன தலைவர் எஸ்.கே.அப்பாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விஜய் டி.வி. காமெடி கலாட்டா பிரபலங்கள் சதீஷ், ராஜவேலு, டி.எஸ்.கே., அசார், ரேஷ்மா, தேவா ஆகியோர் பங்கேற்ற காமெடி கலை‌ நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கல்லூரி அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story