தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்வு


தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 27 July 2023 7:30 PM GMT (Updated: 27 July 2023 7:31 PM GMT)

திண்டுக்கல் மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழுவுக்கு 9 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி கூட்ட அரங்கில் ஆணையாளர் மகேஸ்வரி முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இதில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கவுன்சிலர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனை ஆணையர் மகேஸ்வரி பெற்றுக் கொண்டார். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் கிருபாகரன், சுவாதி, பானுபிரியா, ஜெயந்தி, ஜான்பீட்டர், வசந்தி, மார்த்தாண்டன், சுபாஷினி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் மாரியம்மாள் ஆகிய 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் இவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் 9 பேரும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 9 பேருக்கும் மேயர், துணை மேயர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன், மாநகராட்சியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட குழுக்களை போன்று இல்லாமல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story