தி.மு.க. ஆலோசனை கூட்டம்


தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நல குழு இணைச்செயலாளருமான தொகுதி மேற்பார்வையாளர் வி.பி. ராஜன் தலைமையில் சிங்கம்புணரி யாதவா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் சிங்கம்புணரி நகர செயலாளர் கதிர்வேல், சிங்கம்புணரி நகர அவை தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் ராசு, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனை தொடர்ந்து சிங்கம்புணரி நகர் பகுதிக்கு 18 பூத் கமிட்டி, சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய கழகம் 72, தெற்கு ஒன்றிய கழகம் 75, எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு 99 பூத்து கமிட்டி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவம் சிங்கம்புணரி நகர் பகுதிக்கு 2,900, சிங்கம்புனரி வடக்கு ஒன்றியத்திற்கு 4000, தெற்கு ஒன்றியத்திற்கு 5,550, எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு 7,000 உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவபுரிசேகர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார், சிங்கம்புணரி நகர துணைச்செயலாளர் அலாவுதீன், தி.மு.க. பிரதிநிதி குடோன்மணி, மருத்துவர் அருள்மணி நாகராஜன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், தருண் மெடிக்கல் புகழேந்தி, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தனுஷ்கோடி, பூமிநாதன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு சையது இப்ராஹிம், கார்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story